சபாஷ் மேயர்...
ஆச்சரியப்பட்ட
முதல்வர்...
யாராக இருந்தாலும் எனக்கென்ன? நான் வெளிப்படையாக செயல்பட விரும்புகிறேன், கட்சித் தலைவர் முதல்வர் ஸ்டாலின் அதற்கான முழு சுதந்திரம் எனக்கு தந்துள்ளார்" என்ற வேலூர் மேயர் சுஜாதாவின் பேச்சு பல தரப்பையும் ஈர்த்து வருகிறது.5 வருடங்களாக ஆசிரியர் பணி, 15 வருடங்களுக்கும் மேலாக அரசியலில் ஈடுபாடு.. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 31-வது வார்டிலிருந்து பலத்த போட்டிகளுக்கு இடையே மேயராக தேர்ந்தெடுக்கப்
பட்டவர்.
மேயராக பதவியேற்றது முதலே பரப்பரப்பாக அதிகாரிகள் கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறார்..
'அண்ணன் பார்த்துக்கொள்வார்.. அப்பா பார்த்து கொள்வார் கொள்வார் என்று விட்டு விடாதீர், குடும்ப உறுப்பினர்கள் தங்களது பணியில் தலையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பெண் கவுன்சிலர்கள், மேயர்களுக்கு திமுக எம்பியும் அக்கட்சியின் மகளிரணிச் செயலாளருமான கனிமொழி முதல்நாள் அறிவுறுத்தியதாலோ என்னவோ, குடும்ப உறுப்பினர்களின் உதவி இல்லாமல், பெண் மேயர்கள் தங்களை மட்டுமே முன்னிறுத்தி பொறுப்பை வகிக்க ஆரம்பித்துள்ளனர்.அதனால்தான், 4 நாட்களுக்கு முன்பு ஒரு நாளிதழுக்கு சுஜாதா அளித்த பேட்டியில், 'தனித்து இயங்குவதற்கான முழு திறமையும் பெண்களுக்கு உள்ளது... என் முடிவுகளை நான்தான் தேர்ந்தெடுக்கிறேன்.. அதில் என்னுடைய கணவர் தலையிடுவதில்லை. கட்சியும் தலையிட்டது இல்லை' என்று தைரியமாக சொன்னார்.. அத்துடன் மிக முக்கிய பணி ஒன்றையும் தற்போது வேலூரில் கையில் எடுத்துள்ளார்.வேலூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் உள்ள முக்கிய பிரச்சனைகள் குறித்து அதிகாரிகள், பொதுமக்களிடம் ஆலோசனை நடத்தி முடித்துள்ளதையடுத்து, அம்மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண்பதே தன்னுடைய முதல் லட்சியம் என்று உறுதியும் ஏற்றுக் கொண்டுள்ளார்.. அதனால்தான், இந்த 4 மண்டலங்களிலும் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை நிலுவை தொகையை வசூலிக்கும் பணியில் தீவிரமாக இறங்கிவிட்டார்.மேயர் சுஜாதா உத்தரவின் பேரில், நீண்ட காலம் வாடகை செலுத்தாத கடைகளுக்கு கமிஷனர் அசோக்குமார் நோட்டீஸும் அனுப்பிவிட்டார்.. நிலுவை தொகையை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் வார்னிங் தரப்பட்டது... இறுதியில், கடந்த 2 நாட்களில் மட்டும் 223 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், ஒருவருடமாகவே, வாடகை பாக்கி வைத்திருந்த 6 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது.இதில் ஒரு முக்கியமான விஷயமான என்னவென்றால், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள கடைகளில் திமுக நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் கடைகளும் இருக்கிறதாம்.. நோட்டீஸ் & சீல் வைக்கப்பட்ட விஷயத்தை கேள்விப்பட்டதுமே, சம்பந்தப்பட்ட சில திமுக புள்ளிகள் சிபாரிசுக்கு வந்து நிற்க, அவர்களிடமும் கண்டிப்பும், கறார்தன்மையும் காட்டி ஓட விட்டாராம் சுஜாதா..பொறுப்பேற்ற இந்த 2 வாரங்களுக்குள், அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை ஆலோசனை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.. சில விஷயங்களுக்கு தீர்வும் காணப்பட்டுள்ளது.. தொகுதி மக்களுக்கு உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் என்னென்ன? அவற்றை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்தும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகி உள்ளதாம்.. . மேயரின் இந்த அதிரடிகள், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆச்சரியத்தை தந்தாலும், மறுபக்கம், லோக்கல் நிர்வாகிகளுக்கு அதிருப்திகளை ஏற்படுத்தி வருவதுடன், காதில் புகையும் வர ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.தன்னுடைய பணிகள் குறித்து சுஜாதா சொல்லும்போது, 'நான் வெளிப்படையாக செயல்பட விரும்புகிறேன், கட்சித் தலைவர் முதல்வர் ஸ்டாலின் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். என்னுடைய கணவரும் அலுவலக பணியில் தலையிடுவதில்லை.. அதனால் 100 சதவீதம் சுதந்திரமாக பணி செய்து வருகிறேன். வேலூர் மக்களின் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்... குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் சாலைகளில் ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள பள்ளங்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும்' என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.
"வாழ்த்துக்கள்"
💐...👍