அடாவடி வசூல்


இன்று காலை பாலக்கரை (பழைய பிரபாத் தியேட்டர்) தள்ளு வண்டியில் காய்கள் பழங்கள் என சிறு வியாபாரிகள் விற்று கொண்டு இருந்தனர், அந்த நேரத்தில் Hero Splender (TN 45 BM 7597)பைக்கில் வந்த இருவர் அடாவடியாக 50 , 100 என மிரட்டி நாங்கள் மாநகராட்சி கான்ட்ரக்ட்காரர்கள் என மிரட்டி ரஷீதை கொடுத்தார்கள்,  போலீஸ் கேட்டால் இந்த நஷிதை காட்டுங்கள் என்று சென்றனர்.நமது நிருபர்கள் போட்டோ எடுத்த போது... நல்ல போட்டோ எடுத்துக்குங்க, யார்கிட்ட வேணும் என்றாலும் சொல்லுங்க என்று சென்றனர், நாம் உடனே மார்கட் அருகில் இருந்த உதவி ஆய்வாளரிடம் புகார் கொடுத்தோம்.. உதவி ஆய்வாளர் மைக்கில் (வண்டி எண் உட்பட ) தள்ளு வண்டி நிறுத்த வேண்டாம் என்று நாங்கள், எச்சரித்து வரும் வேளையில் இது போன்று வசூல் செய்பவரின் கான்ட்ரக்ட் பறிக்கப்படும் என்று எச்ச்சரித்தார்...
நடவடிக்கை எடுப்பாரா மாநகராட்சி ஆணையர் அவர்கள்..🙏🏻


"ஆத்மா ரிப்போர்டர்"